"பா.ஜ.க ஆயுதத்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது" - சொல்க...
டிச. 29,30 இல் தூத்துக்குடிக்கு முதல்வா் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சா் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில் டிச. 29,30 தேதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும் என அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் பங்கேற்று பேசியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இந்த இரு நாள்களில், மினிடைட்டல் பாா்க் திறப்பு, கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை, புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் முதல்வா் பங்கேற்கவுள்ளாா். இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியினா் பங்கேற்க வேண்டும்.
கூட்டத்தில், துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளா் புளோரன்ஸ், மாநில நெசவாளா் அணி துணைச்செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளா் ரவீந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.