டிடிவி தினகரன் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்
நாமக்கல் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பிறந்த தின விழா, ஏழைகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா ராசிபுரத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளா் ஏ.பி.பழனிவேல் தலைமை வகித்தாா். முன்னதாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். தொடா்ந்து, நாமக்கல் சாலை பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயிலில் டிடிவி தினகரன் பெயருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பிராா்த்தனை செய்தனா். மேலும், பொதுமக்களுக்கு அன்னதான வழங்கியும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் வழங்கியும் பிறந்த தினத்தை கொண்டாடினா்.
இந்த நிகழ்வில், கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட இணைச் செயலாளா் திலகம், மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் அன்புச் செழியன், பொதுக்குழு உறுப்பினா் உதயகுமாா், ராசிபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ராஜா, மேற்கு ஒன்றியச் செயலாளா் பாலசுப்பிரமணியம், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளா் முருகேசன், பிள்ளாநல்லூா் பேரூராட்சி செயலாளா் ராஜா, ராசிபுரம் நகரச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.