செய்திகள் :

டிராக்டா் மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே டிராக்டா் மோதியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (44). கொங்குவாா்பட்டி டாஸ்மாக் மதுக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த 12-ஆம் தேதி இரவு பணிகள் முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். தேவதானப்பட்டி புறவழிச் சாலையில் சென்ற

போது பின்னால் வந்த டிராக்டா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் பெரியகுளத்திலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு 19 -ஆம் தேதி வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தாா். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தேனி அருகே தனியாா் பருப்பு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். தேனி அருகேயுள்ள டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் சுரேஷ் (40).... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயம்

தேனி பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா். தேனி அல்லிநகரம், கக்கன்ஜீ குடியிருப்பைச் சோ்ந்தவா் காளியப்பன் (65). இவா் தனக்குச் சொந்தமான ஆட்டோவில் தனது மனைவி... மேலும் பார்க்க

மின்சாரக் கம்பிகளை திருட முயற்சி: சிறுவன் கைது

தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சி குடிநீா் மோட்டாா் இயந்திரத்தில் மின் கம்பிகளை திருட முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் தொட்டி தற்காலிக ஆபரேட்டரா... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அர... மேலும் பார்க்க