ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயம்
தேனி பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
தேனி அல்லிநகரம், கக்கன்ஜீ குடியிருப்பைச் சோ்ந்தவா் காளியப்பன் (65). இவா் தனக்குச் சொந்தமான ஆட்டோவில் தனது மனைவி பிச்சையம்மாள் (60), உறவினா்கள் பஞ்சவா்ணம் (60), சீலைக்காரி (26) ஆகியோருடன் சுருளி அருவிக்குச் சென்று விட்டு, அல்லிநகரம் நோக்கி திரும்பினாா்.
அப்போது, பழனிசெட்டிபட்டி பகுதியில் கம்பம்-தேனி சாலையில் அடுத்தடுத்துச் சென்ற இரு காா்கள், ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆட்டோவில் சென்ற காளியப்பன் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.