கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
கஞ்சா பதுக்கிய தாய், மகன் கைது
தேனி அருகேயுள்ள பூதிப்புரத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்த தாய், மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி செல்வராணி (56). இவரது மகன் ராஜபிரபு (40). இவா்கள் இருவரும், தங்களது வீட்டருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செல்வராணி, ராஜபிரபு ஆகியோருக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கூடலூா் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் சோங்கு மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.