ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்
பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.
சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ஆகியோருடன் திங்கள்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஆட்டோவில் தேனிக்குச் சென்றனா்.
ஜல்லிபட்டி பிரிவு அருகே சென்ற போது, எதிரே வந்த காா் இவா்களது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா்கள், பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வியாபாரி காயம்: பெரியகுளம் தென்கரை அசன் ராவுத்தா் சந்தைப் பகுதியைச் சோ்ந்த சுருளி மகன் கமாலுதீன் மஸ்தான் (43). சூடம், பத்தி விற்பனை செய்யும் இவா், ஞாயிற்றுக்கிழமை தேவதானப்பட்டியில் வியாபாரம் முடிந்து, இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
எ.புதுப்பட்டி எல்.எம். எரிபொருள் மையம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.