செய்திகள் :

டிவிஎஸ் சப்ளை செயின் லாபம் ரூ.71.16 கோடியாக உயர்வு!

post image

சென்னை: உலகளாவிய சப்ளை செயின் தீர்வுகள் வழங்குநரான டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.71.16 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.7.47 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ரூ.2,592.31 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.2,539.39 கோடியாக இருந்தது.

இது குறித்த கருத்து தெரிவித்த டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் குளோபல் தலைமை நிதி அதிகாரி ஆர் வைத்தியநாதன், மேம்பட்ட லாப விநியோகம் மற்றும் எங்கள் மாற்று முயற்சிகளை ஒழுங்காக செயல்படுத்தியதன் மூலம், நிதியாண்டு 2026ல் நிலையான முன்னேற்றத்துடன் தொடங்கினோம் என்றார்.

இதையும் படிக்க: என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

Global supply chain solutions provider TVS Supply Chain Solutions Ltd has reported a consolidated profit after tax for the April-June 2025 quarter.

7% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிச... மேலும் பார்க்க

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.ஏப்ரல் முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

புதுதில்லி: பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன என்றார் நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்திரி.சேமிப்பு கணக்கில்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக ந... மேலும் பார்க்க

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.நிலையற்ற வர்த்தகம், ... மேலும் பார்க்க