அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்
டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி 2) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி, 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிக்க: அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!
அதிக ரிஸ்க், அதிக பலன்
இந்திய அணி டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி டி20 போட்டிகளில் இதுபோன்று அதிரடியாக விளையாட விரும்புகிறது. அதிரடியாக விளையாடும்போது தோல்வியடையவும் வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தோல்வியைக் கண்டு பயப்படவில்லை. நாங்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம். அதிக ரிஸ்க் எடுப்பதற்கு அதிக பலன்களும் இருக்கும். அதிரடியாக விளையாடுவதற்கான பாதையை இந்திய அணி வீரர்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர்.
இதையும் படிக்க: பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!
டி20 போட்டிகளில் நாங்கள் தொடர்ச்சியாக 250 அல்லது 260 ரன்கள் குவிக்க முயற்சி செய்வோம். சில போட்டிகளில் 120 அல்லது 130 ரன்களுக்கு ஆட்டமிழக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அதுதான் டி20 கிரிக்கெட்டின் அழகே. அதிக ரிஸ்க் எடுத்து விளையாடாவிட்டால், அதிக பலன்கள் இருக்காது. நாங்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். எதிர்வரும் மிகப் பெரிய தொடர்களிலும் இதனையே தொடர விரும்புகிறோம் என்றார்.