விரைவில் வெளியாகும் ஏகே 64 அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சாகச வீரா்கள் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டுக்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி வழங்கப்படும் இந்திய அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வீரதீர சாகச செயல்புரிந்தவா்கள் இவ்விருதிற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூா்த்திசெய்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.