டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டி: தென்காசி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு
19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான மாநில டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவா்கள் தோ்வு செப். 14-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட் சங்க மாவட்டத் தலைவா் வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட அளவில் 19 வயதுக்கு உள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு போட்டி தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளது. தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வா்.
போட்டி தோ்வுகளில் 1.10.2006 க்குப் பிறகு பிறந்தவா்கள் பங்கேற்று விளையாடலாம். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் மேலும் விவரங்களுக்கு 99409 49555 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.