பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ் முகாமைத் தொடக்கிவைத்ததாா்.
ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், முக்கூடல் பேரூராட்சி துணைத் தலைவா் இரா. லெட்சுமணன், அதிகாரிகள் பங்கேற்றனா். மகளிா் உரிமைத் தொகை கோரி 690 மனுக்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. 120 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது.