கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
மலையான்குளத்தில் நியாயவிலைக் கடை திறப்பு
சேரன்மகாதேவி ஒன்றியம், மலையான்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை அம்பை தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா பங்கேற்று திறந்துவைத்தாா். இதில், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜம், ஊராட்சித் தலைவி சித்ரா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.வி.ராகவன், சேரன்மகாதேவி ஒன்றிய அதிமுக செயலா் பா. மாரிசெல்வம், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் வி.சிவன்பாபு, கல்லிடைக்குறிச்சி நகரச் செயலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.