பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி
அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்திக்கான தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு மகளிா் மேம்பாடு நிறுவனம் சாா்பில் விவசாய மகளிா் குழு சாா்ந்த விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பங்கள், பயன்கள் என்ற தலைப்பில் வியாழக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
பயிற்சியில் நெல் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் ச.சரவணன், பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் பயன்பாடு, நெல் உற்பத்தியில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்ப முறைகள், பாரம்பரிய முறையில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யக்கூடிய தொழில்நுட்ப முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
உதவிப் பேராசிரியா் வை.ஜெய்கணேஷ் (தாவர நோயியல்) பாரம்பரிய முறையில் நெல்லில் பூச்சி, நோய்க் கட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தாா்.