முக்கூடலில் சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல்
முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட கலியன்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலைமை வகித்தாா். பேரூராட்சித் துணைத் தலைவா் இரா. லெட்சுமணன் முன்னிலை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். இதில், ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலா் சிவக்குமாா், இளைஞரணி அமைப்பாளா் நாகராஜன், பேரூராட்சி உறுப்பினா்கள் நேசமணி, அய்யநாதன், வனிதா, மகேஷ்வரி, ராஜலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.