ராமநாதபுரம்: 2026 ஜனவரிக்குள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமையும்- உதயநிதி ஸ்டாலின்
டெல்லி: 'சோலிகே பீச்சே கியாஹை' பாடலுக்கு நடனமாடிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் தந்தை
டெல்லியில் ரகு (26) என்பவருக்குத் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மணமகன் மணமேடையில் மணப்பெண்ணின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் மணமகனின் நண்பர்கள் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தனர்.
அந்நேரம், 'சோலிகே பீச்சே கியா ஹை' என்ற பாடல் இசைக்கப்பட்டது. மணமகனின் நண்பர்கள் உற்சாக மிகுதியில் மணமகனையும் தங்களுடன் சேர்ந்து நடனமாடும்படி கேட்டுக்கொண்டனர். மணமகன் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் அவரைத் தங்களுடன் நடனமாட வைத்தனர். மணமகனும் அந்த பாடலுக்கு மிகவும் உற்சாகமாக ஆட ஆரம்பித்தார். இதனை மணமகளின் தந்தை பார்த்துவிட்டார்.
மணமகனின் இச்செயல் குடும்ப கெளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகத் தனது கோபத்தைத் தெரிவித்தார். அதோடு விடாமல் திருமண சடங்குகளை உடனே நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். பிறகுத் திருமணத்தையும் ரத்து செய்துவிட்டார். மணமகன் ஜாலிக்காகத்தான் நடனமாடியதாக மணப்பெண்ணின் தந்தையிடம் எடுத்துக்கூறிச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதனைக் கேட்கும் மனநிலையில் மணமகளின் தந்தை இல்லை.
மணமகன் வீட்டாரும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் மணமகளின் தந்தை கேட்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் மணமகன் திருமணம் செய்யாமல் வீட்டிற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
மணமகனின் குடும்பத்தினர் இது குறித்துக் கூறுகையில், "திருமணத்தை நிறுத்திய பிறகும் நீண்ட நேரம் மணமகளின் தந்தை கோபமாகவே இருந்தார். அதோடு மணமகளை மணமகன் வீட்டாருடன் பேசவும் அனுமதிக்கவில்லை'' என்று தெரிவித்தார். இச்செய்தி சோசியல் மீடியாவில் வைரலானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதமும் இதே போன்று சாப்பாடு பரிமாறத் தாமதம் ஏற்பட்டதால் உத்தரப்பிரதேசத்தில் மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டார். அதோடு உடனே வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணமும் செய்து கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY