டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்
புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்துள்ளது.
பிப்ரவரி 15ம் தேதி டெல்லியில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

எக்ஸ் தளத்தின் கன்டென்ட் பாலிசி மற்றும் நெறிமுறை விதிகளை மேற்கோள்காட்டி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கோரியிருக்கிறது. கடந்த 17ம் தேதியே இதற்கான நோட்டிஸை அனுப்பி, 36 மணிநேரத்துக்குள் வீடியோக்களை நீக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டதாக ஹிந்துஸ்தான் தளம் கூறுகிறது.
இந்த வீடியோக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த நாட்களில், இந்திய ரயில்வேயின் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என்றும், இவை தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play