கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!
டெஸ்ட் - டிரைலர் வெளியீடு!
சித்தார்த், மாதவன் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ’டெஸ்ட்’.
இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் படம் வெளியாகவுள்ளது.
டெஸ்ட் படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இன்று டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வருகிற ஏப். 4 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.