தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
டோக்கியோவில் பிரதமர் மோடி!
ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணமாக தில்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி டோக்கியா நகருக்குச் சென்றடைந்தார்.
15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியோ சென்ற பிரதமா் மோடியை விமான நிலையத்தில் அந்நாட்டின் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து மோடி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் பிறருடன் ஆலோசிக்கவுள்ளேன். இதன்மூலம் ஏற்கனவே உள்ள கூட்டாண்மை வலுப்படுத்தவும் புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே உள்ள சிறப்பு உத்திசாா்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவு குறித்து பிரதமா் மோடியும், ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபாவும் மறுஆய்வு செய்ய உள்ளனா்.
சீன பயணம்
ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி 2 நாள் (ஆக.31-செப்.1) பயணமாக சீனா செல்ல உள்ளாா்.
இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே சீனா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.