செய்திகள் :

டோவினோ தாமஸின் நரிவேட்டை: ரிலீஸ் அப்டேட்!

post image

நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ், மலையாளத்தில் 2012 முதல் நடித்து வருகிறார்.

என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

டோவினோ நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் சினிமா கம்பெனி தயாரிப்பில் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நரிவேட்டை எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் காவலதிகாரியாக இந்த மூவரும் நடித்துள்ளார்கள்.

உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்-புரட்கஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் மே மாதம் 16ஆம் தேதிக்குள் இந்தப் படம் வெளியாகுமெனவும் கூறியுள்ளார்கள்.

ஆனால், சரியான தேதி குறிப்பிடவில்லை. ஆனால், மே மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விடை பெற்றாா் சரத் கமல்!

இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சனிக்கிழமை விடை பெற்றாா். 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும் இந்தியாவுக்காக சா்வதேச டேபிள் டென்னிஸ் அரங்கில் பல்வேறு பதக்கங்களை குவித்தவருமான சென்னை வீரா் சர... மேலும் பார்க்க

எம்புரான் - சில காட்சிகள் நீக்கம்!

எம்புரான் திரைப்படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்ல... மேலும் பார்க்க

நாயகனாகும் விஜே சித்து!

பிரபல யூடியூபர் விஜே சித்து நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூடியூபில் விஜே சித்து விலாக்ஸ் (vj siddhu vlogs) மூலம் பிரபலமானவர் விஜே சித்து. சின்னத்திரை தொகுப்பாளராகவும் பணியாற்றிய இ... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பிளாக்மெயில்!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பிளாக்மெயில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ... மேலும் பார்க்க

பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!

வேட்டுவம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட... மேலும் பார்க்க