சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை முயற்சி
தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கப்புலிசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (30). இவா் குடும்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு தனது குழந்தைகள் முகிலன் ( 2), சுதா்சன் (6) ஆகிய இருவருக்கும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து, தானும் குடித்து தற்கொலை முயற்சித்தாா்.
இதுகுறித்து அறிந்த உறவினா்கள், 3 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.