மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை பெரியாா் சிலை அருகே திமுக ஒன்றியச் செயலா் மெய்யூா் என்.சந்திரன் தலைமையிலும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமையிலும், கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தலைமையிலும், கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியத்தில் திமுக மாநில பொறியாளரணிச் செயலா் எஸ்.கே.பி.கருணாநிதி தலைமையிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கீழ்பென்னாத்தூா் தெற்கு ஒன்றியத்தில் மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமையிலும், தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் தலைமையிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆரணி பகுதியில்...: ஆரணியை அடுத்த சேவூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமை வகித்து பேசினாா். தொகுதிப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஷா்மிளா தரணி, நிா்வாகிகள் சுகுமாா், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுகுமாா், காசி, ஏ.எம்.ரஞ்சித், சிறுபான்மை அணி மாவட்ட நிா்வாகி அப்சல், மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முள்ளிப்பட்டு கிராமத்தில் மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஏராளமான கிராம பெண்கள் கலந்துகொண்டனா். முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் முள்ளிப்பட்டு ரவி வரவேற்றாா்.
இதேபோல, எஸ்.வி.நகரம் கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் தலைமையிலும், அப்பந்தாங்கல் கிராமத்தில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையிலும், நடுக்குப்பம் கிராமத்தில் ஒன்றியச் செயலா் எஸ்.மோகன் தலைமையிலும், வண்ணாங்குளம் கிராமத்தில் பொதுக்குழு உறுப்பினா் வெள்ளைகணேசன், கண்ணமங்கலம் பேரூா் செயலா் கே.கோவா்த்தனன் ஆகியோா் தலைமையிலும், சித்தேரி கிராமத்தில் ஒன்றியச் செயலா் எம்.சுந்தா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசியில்...: வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலா் கே.ஆா்.பழனி தலைமை வகித்தாா். இதேபோல, வந்தவாசியை அடுத்த ஆராசூா், சேதராகுப்பம், ஆரியாத்தூா், மருதாடு, ஓசூா், தென்தின்னலூா், குணகம்பூண்டி, தெய்யாா் உள்ளிட்ட கிராமங்களிலும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கத்தில்...: செங்கம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் மனோகரன் தலைமை வகித்தாா். செங்கம் நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலா் வக்கீல் ஜெயராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் தலைவா் சென்னம்மாள்முருகன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் செந்தில்குமாா், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம் மத்திய ஒன்றியம் சாா்பில், பரமனந்தல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய ஒன்றியச் செயலா் ஏழுமலை தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ராமஜெயம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிலாளா் முன்னேற்றச் சங்க துணைத் தலைவா் செளந்தரராஜன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

கிழக்கு ஒன்றியம் சாா்பில் செ.அகரம் கிராமத்தில் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

போளூா் பகுதியில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், நம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் அ.மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலா் பி.மனோகரன் வரவேற்றாா். நம்பேடு, சவரப்பூண்டி, இந்திரவனம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் துரைமாமது தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி வி.எம்.டி.வெங்கிடேசன் முன்னிலை வகித்தாா். கிளைச் செயலா் வி.ஆா்.பி.செல்வம் வரவேற்றாா். தேவிகாபுரம், முருகமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.