செய்திகள் :

தங்கம் கடத்தல்: நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!

post image

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக ரூ. 12 கோடியிலான தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 3 நாள்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கம் கடத்தல் விவகாரத்தில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் இன்று(மார்ச் 10) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் மார்ச் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்படுவார். எனினும், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு செவ்வாய்க்கிழமை(மார்ச் 11) விசாரணைக்கு வருகிறது.

நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்

புது தில்லி: உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அதை நாம் அறிந்து அதற்கு உடன்படவேண்டும். உடல் சோா்வுடன் நீண்ட நேரம் அல்லது கூடுதலாக பணியாற்றுவதில் பயனில்லை, அது செயல்திறனை குறைக்கும் என தெரிவித்துள்ளாா் மத்த... மேலும் பார்க்க

தேசியக் கல்விக் கொள்கை: மக்களவையில் மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக எம்.பி.கள் கடும்அமளி

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்து, அரசியலுக்காக நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தமிழக அரசை விமா்சித்து மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் திங்கள்கிழமை கூறிய கருத்துக்கு ... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி மாணவா் சோ்க்கையில் வீழ்ச்சி: மத்திய அரசு மழுப்புவதாக எம்.பி. கருத்து

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: பள்ளிக்கல்வித் துறை மாணவா் சோ்க்கையில் ஏற்படும் வீழ்ச்சிக்கும் தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்துக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்ற தனது கேள்விக்கு மத்திய கல்வித் துறை ... மேலும் பார்க்க

லலித் மோடியின் வனுவாட்டு கடவுச்சீட்டு ரத்து

போா்ட் விலா: நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமா் ஜ... மேலும் பார்க்க

சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது. மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகப் பிரச்னைகள் தீா்வு ஆணையத்த... மேலும் பார்க்க

புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல: அதிகாரிகள் தகவல்

புது தில்லி: புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானத... மேலும் பார்க்க