சென்னையில் வந்து குவியும் கடத்தல் பொருள்கள்! என்னதான் தீர்வு?
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ. 7,140-க்கும், சவரன் ரூ. 57,120-க்கும் விற்பனையான நிலையில், திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் தங்கம் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று(டிச. 17) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 57,200-க்கும், கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 7,150-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்: காங்கிரஸ் எம்.பி.க்கள் அவசர ஆலோசனை!
அதேபோல், இரண்டாம் நாளாக வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.