ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல...
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த ஏப். 12-ஆம் தேதி முதல்முறையாக சவரன் ரூ. 70,160-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை மே 8-இல் சவரன் ரூ. 73,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 920 குறைந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.
இதற்கிடையே அமெரிக்கா - சீனா இடையே பரஸ்பர வரி விதிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தை சுமுகமான முடிவை எட்டியுள்ளதால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றம் தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் பதிலாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியதால், சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தது.
இச்சூழல் இந்தியாவிலும் பிரதிபலிக்கும் பட்சத்தில், சென்னையில் தங்கம் விலை மே 12-இல் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து ரூ. 70,000-க்கும், மே 13-இல் சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ. 70,840-க்கும் விற்பனையானது.
தொடா்ந்து மே 14-ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,560 குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ. 195 குறைந்து ரூ. 8,610-க்கும், சவரனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று(மே 16) மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 110 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! 92.09% தேர்ச்சி!