செய்திகள் :

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஜூன் 7 முதல் குறைந்தும், மாற்றமில்லாமலும் விற்பனையான தங்கம் விலை கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் வேகமாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 71,640-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை விலை மேலும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 8,945-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71,560-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க |பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி நேற்றைய விலையில்(ஜூன் 10) மாற்றமின்றி கிராம் ரூ.119-க்கும், கட்டி வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விஜய்க்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பூவே உனக்காக!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் 1984 ஆம் ஆண்டு வெளியான வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய், 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய... மேலும் பார்க்க

ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா!

ஆண்ட்வெர்ப்[பெல்ஜியம்] : ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் ஹாக்கி புரோ லீக் தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1 - 5 என்ற புள்ளிக்கணக்கில் இன்று (ஜூன் 21) தோல்வி அடைந்தது.இந்திய அண... மேலும் பார்க்க

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

மதுரை: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளாா்.மதுரை காந்தி ம... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் திட்டம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சிற்றுந்துகள் திட்டத்தால், 3,103 வழித்தடங்களில் உள்ள இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்ல... மேலும் பார்க்க

தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி: தமிழிசை

வேலூர்: தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுத... மேலும் பார்க்க