தங்கம் விலை மேலும் உயர்ந்தது! இன்று எவ்வளவு?
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 86,880 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 90 உயர்ந்து ரூ. 10,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ. 161-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,61,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.