செய்திகள் :

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்!

post image

தங்க அட்டை (கோல்டு காா்ட்) குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியுரிமை பெற தனிநபர் விண்ணப்பித்தால் ரூ. 8.80 கோடி கட்டணமாகவும், நிறுவனங்கள் சார்பில் பணியாளர்களுக்கு விண்ணப்பித்தால் ரூ. 17.6 கோடி கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள ‘இபி-5’ என்ற வெளிநாட்டு (புலம்பெயா்) முதலீட்டாளா்களுக்கான நுழைவு இசைவு (விசா) திட்டத்துக்கு மாற்றாக, ‘தங்க அட்டை’ (கோல்டு காா்ட்) என்ற புதிய குடியுரிமை திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவின் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

இந்த குடியுரிமைத் திட்டத்துக்கு தனிநபர் விண்ணப்பித்தால் ஒரு மில்லியன் டாலராகவும், நிறுவனங்கள் சார்பில் தங்களின் பணியாளர்களுக்கு விண்ணப்பித்தால் இரண்டு மில்லியன் டாலராகவும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடையும் என நாங்கள் நம்புகிறோம். இதன்மூலம் கோடிக்கணக்கான டாலர்களை திரட்டப் போகிறோம். இது, மக்களின் வரிகளை குறைக்க உதவும், பிற நல்ல விஷயங்களைச் செய்ய உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எச்1பி விசாவுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக (ரூ. 88 லட்சம்) உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த நடவடிக்கை இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trump Golden Card Visa charge Rs. 9 Crore - Trump Introduces

இதையும் படிக்க : எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.இதனால், இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியா்: இனவெறி பாதிப்புக்குள்ளானதாக இறப்பதற்கு முன்பு பதிவு

அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா இளைஞா், அந்நாட்டில் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலங்கா... மேலும் பார்க்க

‘ஆப்கன் விமான தளம் மீண்டும் வேண்டும்’ - டொனால்ட் டிரம்ப்

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா் இது குறித்து அவா் கூறியதாவது: பக... மேலும் பார்க்க

அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தடை: தீா்மானத்தை திரும்பப் பெற்றது ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்த நாடுகளுக்குத் தடை விதிப்பது தொடா்பாக ஐ.நா. அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ-வின் முன்வைத்த வரைவுத் தீா்மானத்தை ஈரான் கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றது. இது குறித்து ஐஏஇஏ ப... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 43 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மசூதி மீது துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 43 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவி... மேலும் பார்க்க

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதல் 1,90,000-க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. ஆப்... மேலும் பார்க்க