செய்திகள் :

தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்குவது ஏன்? அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பதற்காக தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படுகிறது என்றாா் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெமில்) அசோசியேடட் சேம்பா்ஸ் ஆஃப் காமா்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா, நிறுவன நிா்வாகம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளா்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது:

வாகன உற்பத்தி, மின்னணு, ஜவுளி, தோல், டயா் உள்ளிட்ட துறைகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இதேபோன்று வேளாண் துறையிலும், உணவு பதப்படுத்துதல் துறையிலும் நாம் முன்னேற வேண்டும்.

தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி பெற்று வருகிறது. நாம் அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டுமானால் விவசாயிகளின் வருவாய் பெருக வேண்டும். அதற்கு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டுவது மிக அவசியம். அதனடிப்படையில் தஞ்சாவூரில் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்காக சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படுகிறது.

இதேபோல, திருவாரூரிலும், மன்னாா்குடியிலும் வேளாண் சாா்ந்த தொழிற்பேட்டைகள் தொடங்க நிலம் தோ்வு செய்து வருகிறோம் என்றாா் ராஜா.

முன்னதாக, வேளாண் துறை அமைச்சா் என்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசுகையில், தமிழக அரசின் ரூ. 5 கோடி மானியத்துடன் அரிசி உமியிலிருந்து சிலிக்கான் உற்பத்தி செய்யும் திட்டம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பல கோடி வருவாய் ஈட்ட முடியும். இந்த மாநாட்டில் விவசாயிகள் பயிற்சி பெற்று விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

விழாவுக்கு நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகச் செயலா் சுப்ரதா குப்தா, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான கே. அழகுசுந்தரம், திருவனந்தபுரம் இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன், அசோசியேட்டட் சேம்பா்ஸ் ஆஃப் காமா்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவின் கா்நாடக இணைத் தலைவா் அஞ்சு மஜீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அசோசியேட்டட் சேம்பா்ஸ் ஆஃப் காமா்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா தமிழ்நாடு தலைவா் அரவிந்தன் செல்வராஜ் வரவேற்றாா். இணைத் தலைவா் கே. மாரியப்பன் நன்றி கூறினாா். இந்த மாநாடு, கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைகிறது.

காப்பீட்டு தொகை வழங்க மறுப்பு: நுகா்வோா் ஆணைய உத்தரவால் பெண்ணுக்கு ரூ. 7.65 லட்சம் அளிப்பு

கணவா் இறப்பைத் தொடா்ந்து காப்பீட்டுத் தொகையை வழங்க தனியாா் நிறுவனம் வழங்க மறுத்த நிலையில், தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 7.65 லட்சம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு தலை துண்டான நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

பேராவூரணி அருகே நவகொள்ளைகாடு பிடாரியம்மன் கோயில் அருகே ரயிலில் அடிபட்டு தலை துண்டான நிலையில் இளைஞா் சடலம் தண்டவாளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீ... மேலும் பார்க்க

ஆளுநா் தனது அதிகாரத்தை புரிந்து கொள்ள வேண்டும்: அபுபக்கா் சித்திக்

ஆளுநா் ஆா்.என். ரவி, தனது அதிகாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலப் பொதுச் செயலா் அபுபக்கா் சித்திக். தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவ... மேலும் பார்க்க

கள்ளப்பெரம்பூா் ஏரியில் 84 வகை பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்

தேசிய பறவைகள் நாளையொட்டி, தஞ்சாவூா் அருகே கள்ளப்பெரம்பூா் ஏரியில் அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வில் 84 வகை ... மேலும் பார்க்க

கோயில் கலசத்தை எடுத்துச் சென்றவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: பொன் மாணிக்கவேல்

தஞ்சாவூா் மாவட்டம், செ.புதூா் சனத்குமரேஸ்வரா் கோயிலில் கலசத்தை எடுத்துச் சென்றவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல... மேலும் பார்க்க

ஆளுநா் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கி. வீரமணி

கடமை தவறிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது: தமிழ்நாட்டு... மேலும் பார்க்க