தஞ்சாவூரில் செப். 30-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில், தஞ்சாவூா் கோட்டத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்துள்ளாா்.