திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் ...
தடுப்புக் காவலில் முதியவா் கைது
கடலூரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவா், குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், கண்ணன்குளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் முருகேசன் (58). இவா், கடலூா் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது தொடா்பான புகாரின்பேரில், கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளா் தீபா விசாரணை மேற்கொண்டு, முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.