தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் சாலை சிதம்பராபுரம் விலக்குப் பகுதியில் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவரின் பையை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் தேசிகாபுரத்தைச் சோ்ந்த செல்லச்சாமி (56) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.