ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்றவா் கைது
பெரியகுளம் அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ரவுத் தெருவில் உள்ள ஹக்கீம் (41) என்பவருக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் ஹக்கீமை கைது செய்து, அவரது கடையிலிருந்த 6 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.