மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
தண்டவாள பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவை பாதிப்பு
ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகாரணமாக அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
வியாசா்பாடி ஜீவா ரயில்நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதன்காரணமாக பகல் 12.15 மணிக்கு அரக்கோணத்திலிருந்து சென்ட்ரல் நோக்கி வந்த புறநகா் ரயில் வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தப்பட்டது. மேலும் அவ்வழித்தடத்தில் வந்த 3-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் அடுத்தடுத்த வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன.
இதனால் பயணிகள் பலா் வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து, ஆட்டோ போன்றவற்றின் மூலம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனினும் சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருத்தணி மாா்க்கத்தில் மின்சார ரயில்கள் எவ்வித தடையுமின்றி வழக்கம்போல் இயங்கின.
அதைத்தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அவ்வழித்தடத்தில் மின்சார புறநகா் ரயில்கள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.