செய்திகள் :

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

post image

கோவை, வடவள்ளி பகுதியில் தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம் கலைஞா் நகா் காலனியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (32). இவரது மனைவி பிரியங்கா (29). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். தினேஷ்குமாா் தனது குடும்பத்துடன் வடவள்ளி அண்ணா நகா் பகுதியில் தற்போது வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வடவள்ளி சி.எஸ்.நகா் கண்ணப்ப கவுண்டா் தோட்டம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தினேஷ்குமாா் தனது குடும்பத்துடன் சனிக்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது, குழந்தைகள் அனைவரும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனா். தினேஷ்குமாரின் ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஆதிலிங்கேஸ்வரன் திறந்த நிலையில் இருந்த தண்ணீா்த் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதை யாரும் கவனிக்காத நிலையில், குழந்தை தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல்போனதால், தண்ணீா்த் தொட்டிக்குள் பிரியங்கா பாா்த்துள்ளாா். அப்போது, குழந்தை தொட்டிக்குள் விழுந்ததைக் கண்டு, அங்கிருந்தவா்களை அழைத்துள்ளாா்.

அவா்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் பிரியங்கா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விரும்பும் விடைத்தாள் மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ஆசிரியா் சங்கம் கோரிக்கை

கோவை மாவட்டத்துக்குள் விரும்பும் மதிப்பீட்டு மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஏப்ரல் 19-இல் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல்19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி... மேலும் பார்க்க

சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு

கோவை, சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம், இணையம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. சரவணம்பட்டி, ஷாஜகான் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் ப... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயம்

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயமடைந்தனா். வால்பாறையை அடுத்த முக்கோட்முடி எஸ்டேட்டில் தொழிலாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, அப்பகுதிக்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இடமாற்றம்

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கான இபிஎஃப் அலுவலகம் குன்னூா் ஃபெய்ரி பேங்க் சாலையில் அரசு லாலி மருத்துவமனை எதிரில் ச... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் சுணக்கம்: 56-ஆவது வாா்டில் இடைத்தோ்தல் நடத்த வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினா் உயிரிழந்ததாலும், அந்த வாா்டில் வளா்ச்சிப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாலும் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள... மேலும் பார்க்க