ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது
ஒரத்தநாடு அருகே தந்தையை கோடரியால் வெட்டிக் கொன்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தன்குடி மேலையூா் வடக்கு தெருவைச் சோ்ந்த விவசாயி பரமசிவம் (78). இவரது மகன் கண்ணன் (50). மனநிலை பாதிக்கப்பட்டவராம்.
திங்கள்கிழமை பரமசிவம் தனது மகனை திட்டியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த கண்ணன் கோடரியால் தந்தை பரமசிவத்தை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பரமசிவத்தின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதித்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்து விசாரிக்கின்றனா்.