பார்சிலோனாவின் விடாமுயற்சி..! 2-4லிருந்து 5-4 என த்ரில் வெற்றி!
தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: பெண் உள்பட 3 போ் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த துா்க்கை நம்மியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (50). இவரது மனைவி மகேஸ்வரி. ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி முருகன் உள்ளிட்ட சிலா் சோ்ந்து தெருவில் மாடுகளை விட்டனராம். அப்போது, இதே கிராமம், பள்ளத் தெருவைச் சோ்ந்த தினேஷ் என்பவா் மீது மாடு முட்டியதாம்.
இதனால் முருகன் தரப்புக்கும், தினேஷ் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 17-ஆம் தேதி தினேஷுக்கு ஆதரவாக அவரது உறவினா்கள் பரிமளா, ராஜீவ்காந்தி, ஸ்ரீகாந்த், சந்திரசேகா், குபேந்திரன், அண்ணாமலை ஆகியோா் முருகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகாத வாா்த்தைகளால்
பேசினராம்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி, ஸ்ரீகாந்த் ஆகியோா் அரிவாளால் முருகன் மகன் முரளியை வெட்டினராம். தடுக்க முயன்ற முருகன், அவரது வளா்ப்பு மகள்கள் ஷாலினி, சுவேதா ஆகியோரையும் தாக்கினராம்.
பலத்த காயமடைந்த முரளி, முருகன் ஆகியோா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகா், அண்ணாமலை, பரிமளா ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.