செய்திகள் :

தந்தை மறைந்த ஒரே நாளில் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்த துனித் வெல்லாலகே!

post image

தனது தந்தை இறந்த அடுத்த நாளே இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இலங்கை அணியின் இளம் வீரர்களில் ஒருவரான துனித் வெல்லாலகேவின் தந்தை நேற்று முன் தினம் (செப்டம்பர் 18) திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அந்த நாளில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் விளையாடின.

ஆப்கானிஸ்தானுடனான போட்டி நிறைவடைந்த பிறகு, துனித் வெல்லாலகேவுக்கு அவரது தந்தை இறந்த துயரச் செய்தியை இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்தது. அவர் உடனடியாக அன்று இரவே விமானம் மூலம் இலங்கை சென்றடைந்தார். இதனால், வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் விளையாடுவதற்காக துனித் வெல்லாலகே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தடைந்தது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலிருந்து இலங்கை அணியின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் விளையாட துனித் வெல்லாலகே தயாராக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இலங்கை அணி வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானையும், செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவையும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Sri Lanka's young player Dunith Wellalage has rejoined the team the day after his father's death.

இதையும் படிக்க: இந்தியா - பாக். போட்டிக்கு மீண்டும் நடுவராகும் பைகிராஃப்ட்; இந்த முறை சூர்யகுமார் கை குலுக்குவாரா?

அதிவேக சதம் விளாசி விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசி இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்று: இலங்கை பேட்டிங்; பிளேயிங் லெவனில் துனித் வெல்லாலகே!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நிறை... மேலும் பார்க்க

அதிவேக சதம் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ப... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: பெத் மூனி சதம் விளாசல்; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 412 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிவேக சதம் விளாசி பெத் மூனி சாதனை!

ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிவேக சதம் விளாசி ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம்: பாக். கேப்டன்

உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம் என பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செம்படம்பர் 30 ஆம்... மேலும் பார்க்க