செய்திகள் :

தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா; அலறிய இளம் பெண் - அக்னி தீர்த்தக் கரையில் அதிர்ச்சி

post image

ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடி சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரைவாசிகள் நாள்தோறும் வருகின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதே போல் யாத்திரைவாசிகளில் சிலரும், சுற்றுலா பயணிகளும் கடலில் மட்டும் நீராடுவர். இவ்வாறு கடலில் குளித்து முடித்த பின் பெண்கள் உடை மாற்றுவதற்கு என தனியார் உடைமாற்றும் அறைகள் சில உள்ளன.

அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள்

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு அதன் எதிரில் உள்ள தனியாருக்கு சொந்தமான டீ கடையுடன் கூடிய உடை மாற்றும் அறைக்கு ஈர துணியினை மாற்ற சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த டீ மாஸ்டர், வயதானவர்களை ஒரு அறைக்கும், இளம் பெண்களை ஒரு அறைக்கும் சென்று உடை மாற்ற கூறியதாக கூறப்படுகிறது.

ராஜேஷ் கண்ணன்

இதையடுத்து ஒருவித தயக்கத்துடன் உடை மாற்றும் அறைக்கு சென்ற இளம் பெண் ஒருவர், உடை மாற்றும் அறை பாதுகாப்பானதா என பார்த்துள்ளார். அப்போது சுவற்றின் இடையே கேமரா பொருத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். உடனடியாக அந்த கேமராவினை எடுத்து வந்து தனது தந்தையிடம் கொடுத்துள்ளார். அவர் தன்னுடன் வந்தவர்களுடன் சேர்ந்து டீ கடை உரிமையாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் டீ மாஸ்டர் மீரான் மைதினை அடித்து வெளுத்தனர். பின்னர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த போலீஸார் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியிருந்த ராஜேஷ் கண்ணனையும், டீ மாஸ்டர் மீரான் மைதீனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

மீரான் மைதீன்

இந்நிலையில், உடை மாற்றும் அறையில் உள்ள கருப்பு டைல்ஸுக்கு மத்தியில் வைக்க கருப்பு கலரிலான கேமராவை ஆன் லைன் மூலம் வாங்கியதாகவும், இதில் பதிவான காட்சிகளை மெமரி கார்டுகளில் பதிவேற்றம் செய்வதுடன் அடிக்கடி மெமரி கார்டுகளை மாற்றியும் படம் பிடித்ததாக போலீஸார் விசாரணையின் போது தெரியவந்தது.

இதனால் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவான மெமரி கார்டுகள் குறித்தும், அக்காட்சிகள் வெளிநபர்களுக்கு பகிரப்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புனித தலத்திற்கு வரும் பெண்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைகழகம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி - கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தப... மேலும் பார்க்க

விருதுநகர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை... என்ன நடந்தது?

மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்ட கிளை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்துார்: கடன் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி; கணவன், மனைவி கைது!

விருதுநகர் மாவட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போ... மேலும் பார்க்க

சென்னை: விமான நிலையத்தில் தொடரும் உயர்ரக கஞ்சா கடத்தல் - சிக்கிய ’குருவிகள்’ - நீளும் விசாரணை

பாங்காக்கிலிருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், போதைப்பொருள்கள் அதிகளவில் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய... மேலும் பார்க்க

தேனி: செம்பு பாத்திரத்தை, இரிடியம் எனக் கூறி ரூ.10 லட்சம் `அபேஸ்' - திரைப்பட பாணியில் நடந்த மோசடி!

சதுரங்க வேட்டை பாணியில் இரிடியம் விற்பனை மோசடியில் தேனி மாவட்டம், சின்னமனூர், போடி பகுதியைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

`வழிப்பறி முதல் போதைப்பொருள் வரை’ - குற்றச் செயல்களில் ஈடுபடும் போலீஸ் எண்ணிக்கை அதிகரிப்பா?

போதை பொருள் விற்பனையும் சிக்கிய காவலரும்!தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருவது காவல்துறையினருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போதை பொருள் விற்பனையைத் தடுக்க தனிப... மேலும் பார்க்க