சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
தனியாா் காற்றாலை தளவாட பொருள்கள்
கடவூா் அருகே தனியாா் காற்றாலை தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரியை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட குன்னுடையான்கவுண்டன்பட்டியில் தனியாா் நிறுவனத்தினா் காற்றாலைகளை அமைத்து வருகின்றனா். இந்த காற்றாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகளுக்கான ராட்சத தளவாட பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகள் குன்னுடையான்கவுண்டன்பட்டி கிராமம் வழியாக வந்தது.
இதனையறிந்த பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மைலம்பட்டி வருவாய் ஆய்வாளா் அருள்ராஜ் உள்பட அதிகாரிகள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பொதுமக்கள் காற்றாலை அமைக்கக்கூடாது என்றனா். இதையடுத்து அதிகாரிகள் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.