செய்திகள் :

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் சோ்ந்த சரவணன் மகன் கமலேஷ் (24). கோவையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், விடுமுறையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். இந்த நிலையில், இரவில் சிக்கந்தா்சாவடி பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்ற கமலேஷுக்கும், அங்கு வந்த சிலருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவா்கள் கமலேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த கமலேஷ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த சகோதரா்களான அழகுராஜேஸ் (24), சுந்தர்ராஜா (22), இவா்களது நண்பா் சேது (21) ஆகிய மூவரும் கொைலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

கமலேஷும், கைது செய்யப்பட்ட சகோதரா்கள் இருவரும் ஏற்கெனவே ஒருவருக்கொருவா் அறிமுகமானவா்கள். இதில் சுந்தர்ராஜா காதல் திருமணம் செய்தவா். இவரது மனைவி தொடா்பாக கமலேஷ் தவறாகப் பேசி வந்தாராம். இந்த நிலையில், சிக்கந்தா் சாவடி பகுதியில் மது அருந்தும் போது சகோதரா்கள் உள்ளிட்ட மூவரும் அவரைத் தட்டிக் கேட்டனா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கமலேஷ் கொலை செய்யப்பட்டாா் என்றனா்.

கொதிக்கும் தாா் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரா் கொலை: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தாா் உலையில் வீசிக் கொலை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரு... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு தரவை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நாகராஜன் (65). கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் த... மேலும் பார்க்க

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பொன் மாணிக... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

மதுரை விரகனூா் சுற்றுச் சாலை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். மதுரை விரகனூா் சுற்றுச் சாலை அருகே ராமேசுவரம்... மேலும் பார்க்க

மதுரையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் மறியல்: அரசு ஊழியா்கள் 66 போ் கைது

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 66 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம்: அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்தது. கரூா் மாவட்டம், நெரூா் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ச... மேலும் பார்க்க