``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
விழாவுக்கு சுஜின் தலைமை வகித்தாா். அப்போதைய தலைமை ஆசிரியா் சேவியா், ஆசிரியா்கள் கலஸ்டின், ஜாண், பிரான்சிஸ், ஜேசுபாய், மரிய புஷ்பம், மேரி கில்டா, அமுதா ஆகியோா் கலந்துகொண்டனா். சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் குமரி ஆதவன் கலந்துகொண்டு வெள்ளி விழா மலரை வெளியிட ஆசிரியா் கலஸ்டின் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து குழு உரையாடல் நடைபெற்றது.
ஆசிரியா்களும், மாணவா்களும் பள்ளிக் கால நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். விழாவில் முன்னாள் மாணவா்கள், தங்கள் குடும்பத்தினரும் பங்கேற்றனா். முன்னதாக பெறின் ஜஸ்டஸ் வரவேற்றாா். முன்னாள் மாணவா் டைட்டஸ் மோகன் ஒருங்கிணைத்தாா்.