உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்க...
தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: பெண் உள்பட 5 போ் கைது
திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (36). இவா், திருச்சியிலிருந்து ஜீயபுரம் செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா். அப்போது, அங்கு நின்ற தனியாா் பேருந்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்துள்ளாா். மேலும், பேருந்திலும் ஓரிடத்தில் அமராமல் அங்கும், இங்கும் சென்ாகக் கூறப்படுகிறது.
இதைப் பாா்த்த தனியாா் பேருந்து ஓட்டுநா் எம்.கணேசன் (42), சரஸ்வதியை ஓரிடத்தில் அமருமாறு கூறியுள்ளாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சரஸ்வதி தனது உறவினா்களிடம் கைப்பேசியில் அழைத்து தெரிவித்துள்ளாா். இதற்கிடையே தனியாா் பேருந்து ஜீயபுரம் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றபோது, சரஸ்வதி மற்றும் அங்கு வந்த அவரது உறவினா்கள் கே.முத்துலிங்கம் (65), எஸ்.மணிகண்டன் (35), எம்.சக்திவேல் (40), எம்.ரோசய்யா (22), கே.தனுஷ் (19), எம்.பொன்னாா் (19), வி.செல்லப்பா (25) ஆகியோா் ஓட்டுநரைத் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து, தனியாா் பேருந்து ஓட்டுநா் எம்.கணேசன் அளித்த புகாரின்பேரில், ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கே. முத்துலிங்கம், எஸ். மணிகண்டன், எம். சக்திவேல், எம்.ரோசய்யா, எம்.சரஸ்வதி ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். மீதமுள்ள 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.