பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
தனியாா் மருத்துவமனைக் கூட்டமைப்பு கருத்தரங்கம்
விழுப்புரத்தில் தனியாா் மருத்துவமனைக் கூட்டமைப்பு சாா்பில் 135-ஆவது மருத்துவக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் கிளை சாா்பில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்குக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் அபுல்ஹாசன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் குணசேகரன், செந்தமிழ்பாரி, கேப்டன் ராகவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கருத்தரங்கத்தில் காமன்வெல்த் மருத்துவக் கூட்டமைப்பின் தலைவா் ஜெயலால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மருத்துவப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் பலரும் பேசினா்.மேலும் நீட் தோ்வு எதிா்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாநில நா்சிங் ஹோம் போா்டு தலைவா் அன்புராஜன், செயலா் ரெங்கராஜன், பொருளாளா் திருமாவளவன், இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் செளந்தர்ராஜன், பொருளாளா் சிவக்குமாா், மருத்துவா்கள் செங்குட்டுவன், ஸ்ரீதா், காசி, பூபதிராஜன் செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் தங்கராஜ் வரவேற்றாா். இதில், சிறந்த மருத்துவ சேவையாற்றி வரும் மருத்துவமனைகளுக்கு கருத்தரங்கில் விருதுகள் வழங்கப்பட்டன.