தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!
நடிகர் தனுஷுடான காதல் வதந்தி குறித்து மிருணாள் தாக்கூர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்தடுத்து அதிக திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இட்லி கடை, தேரே இஸ்க் மெயின் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
தற்போது, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தன் 54-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷும் நடிகை மிருணாள் தாக்கூரும் காதலித்து வருவதாக வதந்தி பரவி வந்தது.
இந்த வதந்திக்குக் காரணம், மிருணாள் நடித்த சன் ஆஃப் சர்தார் - 2 படத்தின் நிகழ்ச்சியில் அவருடன் தனுஷ் கலந்துகொண்டதுதான். இச்சம்பவத்தை வைத்தே இருவரும் உறவில் இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், அண்மையில் நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்கூரிடம் தனுஷ் குறித்து கேட்டபோது, “நானும் தனுஷும் காதலிப்பதாகப் பரவும் செய்திகளைப் பார்க்கும்போது பயங்கர சிரிப்பாக இருக்கிறது. ஒரு நட்பின் அடிப்படையில், நடிகர் அஜய் தேவ்கன் அழைப்பில்தான் என் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் வேறு எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கூலியால் வார் - 2 படத்துக்கு சிக்கல்?