காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்கு...
நண்பர்களை என்றும் மறக்காத பெண் கொரில்லாக்கள்; 20 ஆண்டுக்கால ஆய்வின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!
கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் உள்ள வோல்கானோஸ் தேசிய பூங்காவில் இரண்டு தசாப்தங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண் கொரில்லாக்கள் பழகிய பெண் கொரில்லாக்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது பல ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், பழகிய கொரில்லாக்களை மீண்டும் காணும் போது அவை ஒரு உணர்ச்சி பிணைப்புகளை காட்டுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண் கொரில்லாக்களிடம் இது போன்ற விஷயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகளில் பெண் கொரில்லாக்கள் தங்களுடன் வளர்ந்த ஆண் கொரில்லாக்கள் இருக்கும் குழுக்களை தவிர்ப்பதாக கூறுகிறது.
இது குறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியரான விக்டோயர் மார்ட்டினாக் கூறுகையில் ”பெண் கொரில்லாக்கள் பலமுறை அதன் குழுக்களை மாற்றுகின்றது. அப்படி பல்வேறு குழுக்களைச் சேர்ந்த ஆண் குழுக்களுடனும் பரிச்சியம் ஆகிறது.
ஆனால் அடுத்த குழுவை தேர்ந்தெடுக்கும் போது ஆண் குழுக்களை தவிர்க்கிறது.
இது கொரில்லாக்கள், யாரை அறிவார்கள் என்பது மட்டுமல்ல அவர்களை எப்படி அறிவார்கள் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
ஆனால் எத்தனை வருடங்கள் கழித்தாலும் பழகிய பெண் கொரில்லாக்களுடன் மீண்டும் பிணைப்பை பெண் கொரில்லாக்கள் உருவாக்குகின்றன. குறைந்தது 5 வருடங்கள் ஒன்றாக வளர்ந்த அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த பெண் கொரில்லாக்கள் இவ்வாறு நடப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என விக்டோயர் கூறுகிறார்.