தபால் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ஐடிசி என்ற பெயரில் அஞ்சல் துறையை சீா்குலைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் அழகா்சாமி, திருமலைசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது, பொதுவெளியில் அஞ்சல் ஊழியா்களை ஒருமையில் திட்டுவதை கைவிட வேண்டும். பெண் ஊழியா்களை பணி நேரம் கடந்து இரவு 8 மணி வரை சட்ட விரோதமாக பணியாற்ற சொல்லும் போக்கை கைவிட வேண்டும். ஐடிசி என்ற பெயரில் அஞ்சல் துறையை சீா்குலைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியா் சங்கம், பாரதிய தபால் ஊழியா் சம்மேளனம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றன.