தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்
ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தில்லிக்கு அடிக்கடி செல்கிறார். ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் அண்ணாமலை தமிழகத்தின் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த திட்டத்தில் நிதி பெற்றுத் தரலாமே.
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக ஆளுநர், அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக அரசும் 10 லட்சம் மாணவர்களின் அறிக்கையை வெளியிட முடியும்.
பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் உள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்றார்.
இதையும் படிக்க | அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! - ஓபிஎஸ்
முன்னதாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணைகூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 11, 2025
இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு… pic.twitter.com/G4uHbBtB9Y
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
'பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?" என்று கடுமையாகக் கூறியிருந்தார்.
கல்வித் துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
— K.Annamalai (@annamalai_k) February 11, 2025
PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல்,…