செய்திகள் :

``தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம்; திமுக ஆதரிக்க வேண்டும்"- நயினார் நாகேந்திரன் கோரிக்கை

post image

துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா கூட்டணியும் தங்கள் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் - மோடி
சி.பி.ராதாகிருஷ்ணன் - மோடி

அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க சார்பாக வேண்டுகோள்! நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து INDIA கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது, தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

2022-ல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பட்நாயக்குக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் தி.மு.க-விற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுகும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் மு. க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

புதுச்சேரி: `அரைகுறை ஆடைகளுடன் வரும் பெண்களுக்கு ரெஸ்டோ பாரில் அனுமதி இலவசம்’ - அரசை சாடும் அதிமுக

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரியில் புற்றீசல் போல ரெஸ்டோ பார்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு ரெஸ்டோ பாரில் நடைபெற்ற கொலை தொடர்பாக காவல் ... மேலும் பார்க்க

'நாடகம் நடத்தாதீர்கள்; தமிழகம் முழுக்க தூய்மைப் பணியாளர் போராட்டம் வெடிக்கும்!' - போராட்டக்குழு

'போராட்டக்குழு பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு மறுநாள் விடுவிக்... மேலும் பார்க்க

TVK: கிடா விருந்து; 1.50 லட்சம் நாற்காலிகள்; விஜய்யின் ஸ்பெஷல் உரை - மதுரை மாநாடு லேட்டஸ்ட் அப்டேட்

கிடா விருந்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, ஊரெங்கும் விளம்பரங்கள், வீடு வீடாக அழைப்பு என்று களைகட்டி வருகிறது மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு.புஸ்ஸி ஆனந்த்முதல் ம... மேலும் பார்க்க

ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசியது என்ன ?

சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்ச... மேலும் பார்க்க

திருவாரூர்: ``சாப்பாட்டில் புழு, பூச்சிகள்'' - குமுறும் மத்தியப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள்

திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் அமைத்துள்ள `தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்' மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியின் பெரும் முயற்சியில்... மேலும் பார்க்க

"பொதுவாழ்க்கையில் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்"- சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அன்புமணி ஆதரவு

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, குடியரசு துணைத் தலைவர் பதவியை திடீரென ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.கிட்டத்தட்ட மூன்று ... மேலும் பார்க்க