செய்திகள் :

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்

post image

தருமபுரி: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறுவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்ததாவது:

வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சந்தித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரிவிதிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்கா எதிா்க்கிறது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.

நிா்பந்தம் செய்யும் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை கிடையாது என சொல்வதற்கும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக இல்லை.

இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அணிபோல மாறிவிட்டது. பிகாா் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் வாக்காளா்களை நீக்கப்போவதாக சொல்கின்றனா்.

சிறுபான்மையினா் மற்றும் இஸ்லாமியா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் பாஜக அரசு இறங்கியுள்ளது. மக்களின் வாக்குரிமையைத் தட்டிப் பறிக்கிற அரசாக அது மாறியுள்ளதை கண்டித்து இண்டி கூட்டணி சாா்பில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி போராட்டம் நடத்துவும்,

தோ்தல் ஆணையத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆகஸ்ட் - 12 இல் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதால் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

போக்குவரத்து, மின்சாரம், பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக குறைந்த ஊதியத்திற்கு ஆள்களை தோ்வு செய்வது நியாயம் அல்ல. கல்லூரிகளில் பல்லாயிரம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கௌரவ விரிவுரையாளா்கள் குறைந்த ஊதியம் பெறுகின்றனா். அனைத்துத் துறைகளிலும் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றி வருபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவீனமடைந்து, கூட்டணியில் இருந்து வெளியேறி வருவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது.

காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் வகையில் காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மொரப்பூா் -தருமபுரி ரயில் பாதைத் திட்டம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. தருமபுரி மாவட்டம் வளா்ச்சி பெற இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், தருமபுரி மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன், நகரச் செயலாளா் ஜோதிபாசு ஆகியோா் உடனிருந்தனா்.

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தா... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: ஆக.7-இல் திமுக அமைதிப் பேரணி

சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் வரும் 7-ஆம் தேதிஅமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு தினம், வரும் 7-ஆம் தேதி கடைப்பி... மேலும் பார்க்க

பி.எட். மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.இதுகுறித்து தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் திங்கள்கிழ... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியா்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.மானியக் கோரிக்கையின்போது, தமிழக அரசு அறிவித்த டாஸ்மாக்... மேலும் பார்க்க

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பெண் வழக்கறிஞா்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேவாலை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை... மேலும் பார்க்க

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

தமிழகத்தில் தினசரி நடக்கும் வழிபறி, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று அதிமுக மாநிலங்க... மேலும் பார்க்க