தமிழகத்தில் தேர்தல் பணிக்கு 5 புதிய குழுக்கள் அமைத்தது பாஜக!
தமிழகத்தில் தேர்தல் பணிக்கு 5 புதிய குழுக்களை பாஜக அமைத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதிருந்தே களப்பணியாற்றி வாக்காளர்களைக் கவரவும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்வது தொடர்பாகவும் இந்த குழுக்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்கு 5 புதிய குழுக்களை அமைத்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.